×

மிசோரம் மாநிலத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை

அஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. அங்கு யார் ஆட்சி அமைப்பார் என்பது பிற்பகலுக்குள் தெரிந்து விடும். 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மிசோரம் மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் என்பதால் அங்கு ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட தேர்தல் கமிஷன் அங்கு இன்று வாக்குஎண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்தது. 40 தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இங்கு இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக 13 ைமயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 8.30 மணிக்கு தபால் ஓட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதை தொடர்ந்து மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு பிற்பகலுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post மிசோரம் மாநிலத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை appeared first on Dinakaran.

Tags : Mizoram ,Aswal ,Dinakaran ,
× RELATED மே.வங்கம், அசாமில் சூறைக்காற்றுக்கு 9 பேர் பலி