திருமலை: தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி முடிந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க பெரும்பான்மை இடத்தை பிடித்தது. இந்நிலையில் மாநிலத்தில் தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ரேவந்தை டிஜிபி அஞ்சனி குமார் நேற்று நேரில் சந்தித்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதற்கிடையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவரை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கூடுதல் டிஜிபிக்கள் மகேஷ் பகவத், சஞ்சய் ஜெயின் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post தேர்தல் விதிமுறைகளை மீறி காங்கிரஸ் தலைவரை சந்தித்த தெலங்கானா டிஜிபி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.
