×

3 மாநிலங்களில் பாஜ வெற்றி ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜ வெற்றி இமாலய வெற்றி. 5வது முறையாக மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடித்து, வரலாற்று சாதனை படைத்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் வரலாற்றுச் சாதனையை மக்கள் தீர்ப்பாக வழங்கியிருக்கிறார்கள் .பாஜவின் தொண்டர்களுக்கு உறுதுணையாக இருக்கும் எங்கள் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, எங்களை பாதுகாக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் எங்களை வழிநடத்தும் பிரதமர் மோடிக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் பாஜவின் ஒவ்வொரு தொண்டனுக்கும் கொடுத்திருக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மோடிக்கு ஓபிஎஸ் வாழ்த்து: 3 மாநிலங்களில் பாஜக வெற்றியை பெற்றுள்ளதற்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகள். உங்களது தொலைநோக்கு பார்வை மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு மக்கள் அளித்த பேராதரவுக்கு இந்த வெற்றி ஒரு சான்றாகும். நாட்டின் வளர்ச்சிக்காக உங்களுடன் கரம்கோர்த்து நிற்கிறோம்.

The post 3 மாநிலங்களில் பாஜ வெற்றி ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Union Minister of State L. Murugan ,BJP ,Chennai ,Madhya Pradesh ,Chhattisgarh, Rajasthan ,
× RELATED தலைமை உத்தரவிட்டால் மக்களவை...