×

மாற்றுத்திறனாளிகள் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘தன்னம்பிக்கையும் உழைப்பும் கொண்டு சமூகத்தில் சுடர்விட்டு ஒளிரும் மாற்றுத்திறனாளி தோழர்கள் அனைவருக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் வாழ்த்துகள். சமூகச் சமத்துவமும் சுயமரியாதையும் போற்றி, உங்களது வாழ்வு உயர நம் கலைஞர் வழியில் உங்கள் திராவிட மாடல் அரசு தொடர்ந்து பாடுபடும்’ என்று கூறியுள்ளார்.

அமைச்சர் உதயநிதி: ரூ.1500 என்றிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.2000 என உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். 2021ல் திமுக அரசு அமைந்த பிறகு, 2வது முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்பட்டிருப்பது, மாற்றுத்திறனாளிகளின் ஏற்றத்துக்கும் -வளர்ச்சிக்கும் நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என்பதற்கான சான்றாகும்’’ என கூறியுள்ளார்.

The post மாற்றுத்திறனாளிகள் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Day of Persons with Disabilities ,Chennai ,International Day of Persons with Disabilities ,M.K.Stal ,
× RELATED தேர்தல் பத்திரங்கள் ரத்து தொடர்பான...