×

லாப நட்டக் கணக்கு பார்க்காமல் செங்கல்பட்டு தடுப்பூசி மையம் செயல்பட நடவடிக்கை: ஒன்றிய அரசுக்கு வைகோ கோரிக்கை

சென்னை: மதிமுக பொது செயலாளர் ைவகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டது. தரக்கட்டுப்பாட்டு மையமும் அமைக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் மருந்தின் சந்தை விலை மிகவும் மலிவடைந்ததால், கூடுதல் செலவினங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டது. 2018 முதல் நிதி நெருக்கடியால் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு, 250 பணியாளர்களுக்கான மாதச் சம்பளமும் நிறுத்தப்பட்டு, இடைக்கால நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2021ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்நிறுவனத்தைப் பார்வையிட்டு, தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்குமாறு ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதினார். இங்குள்ள எம்பிக்கள் பலரும் கடிதம் எழுதியபோதிலும், ஒன்றிய அரசு தனியார் நிறுவனங்களிடம் இந்த நிறுவனத்தை ஒப்படைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரியது. எவரும் முன்வராத நிலையில், அதுவும் கைவிடப்பட்டது. எதிர்காலத்தில், கொடிய பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காக்க இந்த நிறுவனம் இன்றியமையாதது. எனவே, லாப நட்டக் கணக்கு பார்க்காமல், இதை செயல்படுத்தச் செய்து, பொதுமக்களுக்கு நன்மை கிடைக்க ஆவன செய்யுமாறு ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தை வலியுறுத்துகிறேன்.

The post லாப நட்டக் கணக்கு பார்க்காமல் செங்கல்பட்டு தடுப்பூசி மையம் செயல்பட நடவடிக்கை: ஒன்றிய அரசுக்கு வைகோ கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Vaccination Center ,VIGO ,Union Govt. ,CHENNAI ,Madhyamik ,General Secretary ,Aivako ,Chengalpattu ,center ,Vaiko ,Union government ,Dinakaran ,
× RELATED நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பச்சைத் துரோகம்: வைகோ கண்டனம்