×

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. குறிப்பாக 40 தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில், கடந்த நவம்பர் 7 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அங்கு 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 04ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், மிசோரம் மாநிலத்தை தவிற மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் படி தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரையில் பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலைக்குள் பெரும்பான்மை நிலவரம் தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

The post மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Assembly ,Madhya Pradesh ,Rajasthan ,Chhattisgarh ,Telangana ,Mizoram ,
× RELATED இந்திரா காந்தியின் சொத்துக்களை...