×

நாசரேத் பஸ் நிறுத்தத்தில் ₹50 லட்சத்தில் சிமென்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி கனிமொழி எம்பி துவக்கிவைத்தார்

நாசரேத், டிச. 3: நாசரேத் பஸ் நிலையத்தில் ₹50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சிமென்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை கனிமொழி எம்.பி. துவக்கிவைத்தார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹50 லட்சம் மதிப்பீட்டில் நாசரேத் பஸ் நிலையத்தில் புதிதாக சிமென்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியின் துவக்க விழா, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நூலக கட்டிடத்தின் திறப்பு விழா என இருபெரும்விழா நடந்தது. தலைமை வகித்த கனிமொழி எம்.பி., புதிதாக சிமென்ட் கான்கிரீட் தளம் அமைப்பதற்கான பணியை கொடியசைத்து துவக்கிவைத்தார்.

பின்னர் அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடத்தை திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.தமிழக மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி, சண்முகையா எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி முன்னிலை வகித்தனர்.

இதில் திமுக வர்த்தக அணி மாநில துணைச்செயலாளர் உமரிசங்கர், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் எம்பி ஏடிகே ஜெயசீலன், நாசரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி, துணைத்தலைவர் அருண் சாமுவேல், நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன், நகர அவைத்தலைவர் கருத்தையா, முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வக் குமார், செயல் அலுவலர் மகேஸ்வரன், மாவட்ட பிரதிநிதிகள் அலெக்ஸ் புரூட்டோ, தாமரைச்செல்வன், முருகதுரை, அன்பு, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரின்பராஜ் லாசரஸ், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜேம்ஸ், சாமுவேல், பத்திரகாளி, தகவல் தொழில்நுட்ப அணி நகர ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், நாசரேத் விஏஓ முத்துமாலை, காமராஜர் ஆதித்தனார் கழக மாவட்டச் செயலாளர் ஐஜினஸ் குமார், நூலகர் பொன்ராதா, பேரூராட்சி கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

The post நாசரேத் பஸ் நிறுத்தத்தில் ₹50 லட்சத்தில் சிமென்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி கனிமொழி எம்பி துவக்கிவைத்தார் appeared first on Dinakaran.

Tags : Kanimozhi MB ,Nazareth bus ,Nazareth ,Nazareth Bus Station ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி