×

மாநகராட்சி 51வது வார்டில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்கும் முகாம்

தஞ்சாவூர், டிச.3: தஞ்சாவூர் மாநகராட்சி 51வது வார்டில் கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பித்தல் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகராட்சி 51வது வார்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் விண்ணப்பித்தல் மற்றும் கண் பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார்.

வருடத்திற்கு ரூ.1.20 லட்சம் ஊதியம் பெறுபவர்களுக்கு இலவசமாக கலைஞர் காப்பீடு திட்டம் விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற்றது. மேலும் 51வது வார்டு பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, சுகாதார இணை இயக்குனர் திலகம், மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, சென்னை காப்பீடு குழு மருத்துவர் இனியால் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post மாநகராட்சி 51வது வார்டில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்கும் முகாம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur Municipal Corporation ,Ward ,Municipal Corporation 51st Ward Medical Insurance ,Dinakaran ,
× RELATED பழைய பஸ் நிலையம் அருகே கையகப்படுத்திய...