×

இன்று இறுதிப்போட்டி பெரம்பலூரில் 5ம் தேதி மின்நிறுத்தம்

பெரம்பலூர்,டிச.3: பெரம்பலூர் நகரில் வரும் 5ம்தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என பெரம்பலூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் முத்தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :பெரம்பலூர் நகர் பகுதிகளான புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ்ஸ்டாண்டு, சங்குப்பேட்டை, மதன கோபாலபுரம், துறைமங்கலம், மின்நகர், 4 ரோடு, பாலக்கரை, எளம்பலூர்சாலை, ஆத்தூர் சாலை, வடக்கு மாதவி, வடக்கு மாதவி சாலை, சிட்கோ, துறையூர்சாலை, அரணாரை, அரசு தலைமை மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணாநகர், கே.கேநகர், அபிராம புரம், வெங்கடேசபுரம், இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, அருமடல், அரு மடல் ரோடு, எளம்பலூர், எளம்பலூர் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளுக்கு வரும் 5ம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9:45 மணி முதல் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த உடன் உடனடியாக மின் விநியோகம் வழங்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post இன்று இறுதிப்போட்டி பெரம்பலூரில் 5ம் தேதி மின்நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Perambalur Electricity Board ,Executive Engineer ,Muthami ,
× RELATED குழந்தை திருமணம் செய்து வைத்தால்...