×

கடையம் அருகே வீட்டில் `கார்த்திகை தீபம்’ ஏற்றிய மூதாட்டி தீயில் கருகி சாவு

நெல்லை, டிச.3: கடையம் அருகேயுள்ள பொட்டல்புதூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த முருகேசன் மனைவி தங்கம்(65) இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. முருகேசன் இறந்து விட்ட நிலையில் தங்கம், தனியாக வசித்து வந்தார். கடந்த திருக்கார்த்திகை அன்று தங்கம், தனது வீட்டில் தீபவிளக்கு ஏற்றினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது ஆடையில் தீப்பற்றி உடல் கருகி பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் மூதாட்டி தங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி தங்கம், நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

The post கடையம் அருகே வீட்டில் `கார்த்திகை தீபம்’ ஏற்றிய மூதாட்டி தீயில் கருகி சாவு appeared first on Dinakaran.

Tags : Kadayam ,Nellai ,Thangam ,Pottalputur Pilliyar Koil Street ,
× RELATED அடிப்படை உரிமைகளை நிறைவேற்றாததை...