×

தேசிய மாசு கட்டுப்பாட்டு தினத்தையொட்டி புகை வெளியிடும் வாகனங்கள் கணக்கெடுப்பு

நாகப்பட்டினம்,டிச.3: தேசிய மாசு கட்டுப்பாட்டு தினத்தையொட்டி நாகப்பட்டினம் அருகே ஒரத்தூர் சிதம்பரனார் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் புகை வெளியிடும் வாகனங்களை கணக்கெடுப்பு நடத்தினர்.
போபால் விஷவாயு பேரழிவை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 2ம் தேதி தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகப்பட்டினம் அருகே ஒரத்து£ர் சிதம்பரனார் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படை மாணவர்கள் புகை வெளியிடும் வாகனங்கள் குறித்து வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் நின்று கணக்கெடுப்பு நடத்தினர்.

மாணவர்கள் பல்வேறு அணிகளாக பிரிக்கப்பட்டு ஒரு மணி நேரம் பள்ளியை கடத்து செல்லும் இரண்டு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், மிதிவண்டியில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் என வகைப்படுத்தி கணக்கெடுக்கப்பட்டது. காற்று மண்டலத்தை மாசுபடுத்தும் கார்பன் மோனாக்சைடு மூன்றில் ஒரு பங்கு வாகனங்களலிருந்து தான் வெளிப்படுகிறது. இரண்டு சக்கர வாகனம் ஒவ்வொன்றும் வெளியிடும் புகையில் 38.5 மில்லிகிராம் கார்பன் மோனாக்சைடு உள்ளது, பத்தாண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட பழைய வண்டிகளில் இந்த அளவு அதிகமாக உள்ளது போன்ற விவரங்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கொடுக்கப்பட்ட நேரத்தில் பள்ளி இருக்கும் இடத்தை பெட்ரோல் வாகனங்கள் 60ம், மிதிவண்டியில் ஆறு பேரும், நடந்து செல்பவர்கள் 13 பேரும் கடந்து சென்றனர் என மாணவர்கள் கணக்கெடுப்பு நடத்தினர். நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை பொறுப்பாசிரியர் பாலசண்முகம் தொகுத்து வழங்கினார். காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இயன்ற வகையில் நடந்து சொல்வதையும் மிதிவண்டியில் செல்வதையும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதையும் பழக்கமாக கொள்ள வேண்டும். அவசியப்படும் போது மட்டும் இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்த வேண்டும். காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு நம்மால் இயன்ற பணி என்று மாணவர்களுக்கு கூறப்பட்டது. தலைமை ஆசிரியர் சிவா நிகழ்ச்சியை வழி நடத்தினார்.

The post தேசிய மாசு கட்டுப்பாட்டு தினத்தையொட்டி புகை வெளியிடும் வாகனங்கள் கணக்கெடுப்பு appeared first on Dinakaran.

Tags : National Emission Control Day ,Nagapattinam ,National Pollution Control Day ,Orathur Chidambaranar ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்வைப்பு