×

கொல்ல முயற்சி; இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேருக்கு சிறை தண்டனை

மெல்போர்ன்: நியூசிலாந்தின் அக்லாந்தில் சீக்கிய வானொலி தொகுப்பாளர் ஹர்னெக் சிங் என்பவர் காலிஸ்தானியர்களுக்கு எதிராக கருத்து கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு, டிசம்பர் 23ம் தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த கும்பல் ஹர்னெக் சிங்கை பயங்கரமாக தாக்கி கொலை செய்ய முயற்சித்தது. சுமார் 40 இடங்களில் அவருக்கு கத்திக்குத்து விழுந்து இருந்தது.

சுமார் 350 தையல்கள் போடப்பட்டு பல்வேறு அறுவை சிகிச்சைக்கு பின் அவர் உயிர்பிழைத்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 28ம் தேதி நடந்தது. விசாரணையின் முடிவில், சீக்கிய வானொலி தொகுப்பாளரை தாக்குவதில் மூளையாக செயல்பட்டவருக்கு பதிமூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் சர்வ்ஜீத் சித்துவுக்கு ஒன்பதரை ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் சுக்ப்ரீத் சிங்கிற்கு (44)6மாத வீட்டுக்காவலும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post கொல்ல முயற்சி; இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேருக்கு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : Melbourne ,Harnek Singh ,Akland, New Zealand ,Khalistans ,
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை