×

தேனி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தேனி, டிச. 3: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள தேனி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில், தேனி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூடலூர்.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் சன்னாசி முன்னிலை வகித்தனர். தேனி நகர காங்கிரஸ் தலைவர் கோபிநாத் வரவேற்றார். இக்கூட்டத்தின்போது, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெறுவதை சிறப்பாக கொண்டாடுவது, வருகிற 15ம்தேதிக்குள் அனைத்து நகர, வட்டாரங்களிலும் செயல்வீரர்கள் கூட்டங்களை நடத்துவது என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், நகர தலைவர்கள் போடி முசாக்மந்திரி, சின்னமனூர் பழனிமுத்து, பெரியகுளம் கனகசீதாமுரளி, கூடலூர் ஜெயப்பிரகாஷ், கம்பம் போஸ், வட்டாரத் தலைவர்கள் பெரியகுளம் டாக்டர்.ஹம்சாமுஹம்மது, உத்தமபாளையம் வக்கீல்.சத்யமூர்த்தி, போடி ஜம்பு சுதாகர், ஆண்டிபட்டி ராஜேஷ்கண்ணன், கடமலைக்குண்டு தங்கம், சின்னமனூர் ஜீவா, பொதுக்குழு உறுப்பினர்கள் முனியாண்டி, பெருமாள், எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாவட்ட தலைவர் இனியவன், மாநில துணை தலைவர் முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தேனி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Theni District Congress Executives Consultative Meeting ,Theni ,Theni District Congress ,Palanisettipatti ,Theni District Congress Executives ,Dinakaran ,
× RELATED பார்வை மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்