×

செல்பி எடுத்த மாணவனை தாக்கிய யானை

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே சித்திகுள்ளானூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஆண் மற்றும் பெண் யானை வழி தவறி ஊருக்குள் புகுந்தது. பின்னர், விளை நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தின. அப்போது, யானைக்கு பின்னால் சென்று செல்பி எடுத்த கோட்டியான்தெருவைச் சேர்ந்த தீபக் (22) என்ற ஐடிஐ மாணவனை யானை தாக்கியது.

இதில், காயமடைந்த மாணவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்த மேட்டூர், சேலம், தர்மபுரி வனத்துறையினர் 120 பேர், தீயணைப்பு வீரர்கள் சென்று யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

The post செல்பி எடுத்த மாணவனை தாக்கிய யானை appeared first on Dinakaran.

Tags : Mettur ,Siddikkullanur ,Mecheri, Salem district ,
× RELATED மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லை...