×

அமலாக்கத்துறை அதிகாரி கைது; சட்டம் தன் கடமையை செய்வதில் தவறில்லை: எடப்பாடி பழனிசாமி கருத்து

ஓமலூர்: அமலாக்கத்துறை அதிகாரி கைதானதில் சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது, அதில் தவறில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுடன் பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்ச புகாரில் சிக்கியுள்ளார். எங்கு தவறு நடந்தாலும் தவறு தவறுதான், யார் குற்றம் புரிந்தாலும், குற்றம் குற்றம் தான், அதில் சட்டம் கடமையை செய்வதில் எந்த தவறும் இல்லை. சட்டப்பேரவை மசோதாக்களை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பியது குறித்து உச்ச நீதிமன்றமே இறுதி தீர்ப்பு கொடுத்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைகள், முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை 95 சதவீத பணிகள் முடிந்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்த பின்பு கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அமலாக்கத்துறை அதிகாரி கைது; சட்டம் தன் கடமையை செய்வதில் தவறில்லை: எடப்பாடி பழனிசாமி கருத்து appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Omalur ,AIADMK ,general secretary ,
× RELATED குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட...