×

அமலாக்கத்துறை என்னையும் மிரட்டியது: சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பேட்டி

நெல்லை: அமலாக்கத்துறை இடைத்தரகர்கள் மூலம் என்னையும் மிரட்டியது என்று நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பேட்டியளித்தார். நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதற்கான பணி நியமன ஆணைகளை சபாநாயகர் அப்பாவு நேற்று வழங்கினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்படுகிறது. ஒன்றிய அரசின் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவை பாஜ ஆட்சி அல்லாத மாநிலங்களில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் நூல் விட்டு மிரட்டல் விடுகிறது. முதலில் இடைத்தரகர்கள் மூலம் பேசுவர். பணியவில்லை என்றால் பின்னர் நோட்டீஸ் அனுப்புவர். இதுபோன்ற செயல்கள் அதிகமாக நடப்பது வேடிக்கையாக உள்ளது.

என்னையும், இடைத்தரகர்கள் மூலம் பேசி 3 மாதங்களாக மிரட்டினர். முதலில் பிரச்னை இருக்கிறது என்றனர். ஊரை விட்டுச் சென்று விடுங்கள். உங்களது செல்போன் நம்பரை மாற்றுங்கள், என்றெல்லாம் மிரட்டல் விடுத்தனர். எதற்கும் நான் அசரவில்லை. இப்போது லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை கையும், களவுமாக பிடித்துள்ளனர்.

அண்ணாமலைக்குதான் முதிர்ச்சி இருக்கிறதா? என கேட்க வேண்டும். அவர் மாதம் ₹5 லட்சம் வீட்டு வாடகை எப்படி கொடுக்கிறார் என்று அமலாக்கத்துறை தான் கண்டுபிடித்து சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அமலாக்கத்துறை என்னையும் மிரட்டியது: சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Paddy ,Speaker ,Pawu Stirring ,Nella ,Vannarpet ,
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...