×

ம.பி.யில் கட்சி அலுவலகம் திறக்கும் அகிலேஷ்யாதவ்

போபால்: மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடனான தொகுதி பிரச்னை காரணமாக 68 வேட்பாளர்களை களமிறக்கி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி தனித்து போட்டியிட்டது. 2024 மக்களவை தேர்தலுக்கு முன் மத்தியபிரதேசத்தில் கட்சியை வலுப்படுத்த அகிலேஷ் யாதவ் முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து உத்தரபிரதேச எல்லையில் அமைந்துள்ள புந்தேல்கண்ட், விந்தியா பகுதிகளில் சமாஜ்வாடி கட்சியை வலுப்படுத்த தனி அலுவலகங்களை திறக்க கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக சந்தர்பூர் மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான கஜுராகோவில் 6,500 சதுரஅடி நிலத்தை சமாஜ்வாடி வாங்கி உள்ளது. அங்கு புதிய அலுவலகம் தயார் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

The post ம.பி.யில் கட்சி அலுவலகம் திறக்கும் அகிலேஷ்யாதவ் appeared first on Dinakaran.

Tags : Akhileshyatav ,Bhopal ,Samajwadi Party ,Akhilesh Yadav ,Congress ,Madhya Pradesh assembly elections ,Dinakaran ,
× RELATED தோல்வி பயத்தால் தன்னம்பிக்கையை இழந்த...