×

அயோத்திதாசர் பண்டிதருக்கு சிலை முதல்வருக்கு காங்கிரஸ் பாராட்டு

சென்னை: அயோத்திதாசர் பண்டிதருக்கு சிலை அமைத்து நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அறிவியக்கத்தின் மாபெரும் பேரொளி அயோத்திதாசப் பண்டிதரின் 175வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை சென்னை கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்பித்துள்ளதை காங்கிரஸ் எஸ்சி,எஸ்டி பிரிவு சார்பாக மகிழ்வுடன் பாராட்டி வாழ்த்துகிறேன் என அப்பிரிவின் மாநில தலை வர் எம்.பி.ரஞ்சன் குமார் தெரிவி த்துள்ளார்.

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்சி, எஸ்டி பணியாளர் நலச்சங்கம் பொது செயலாளர் டி.மகிமை தாஸ், தலைவர் மணிமொழி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: அயோத்திதாசரின் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை கிண்டி காந்திபண்டம் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை திறந்து வைத்தமைக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

The post அயோத்திதாசர் பண்டிதருக்கு சிலை முதல்வருக்கு காங்கிரஸ் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,Ayodhya Pandita ,CHENNAI ,Chief Minister ,Ayodhyasar Pandithar ,Ayodhyasap ,Tamilnadu ,Ayodhyasara Pandithar ,
× RELATED பாசிச ஆட்சி நாளையுடன் முடிவுக்கு வரப்போகிறது: செல்வப்பெருந்தகை பேட்டி