×

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1ன் ASPEX கருவி செயல்படத் தொடங்கியது: இஸ்ரோ தகவல்

பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பிவைக்கப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ள முக்கிய கருவி செயல்பாட்டை தொடங்கியிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தவாறு விண்கலத்தின் செயல்பாடுகளை வின்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் முக்கிய கருவியான ஸ்பெக்ட்ரோமீட்டர் தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது. ஆதித்யா விண்கலமானது சூரியனின் எல்-1 பகுதியில் வரும் ஜனவரி 7ம் தேதி நுழையும் என்றும் வின்ஞானிகள் கூறியுள்ளனர்.

The post சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1ன் ASPEX கருவி செயல்படத் தொடங்கியது: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Bengaluru ,Sun ,Dinakaran ,
× RELATED 3 தனிப்படை அமைத்து கொலையாளிக்கு வலை...