×

திருவில்லிபுத்தூரில் தொடர் மழையால் பெரியகுளம் கண்மாய் நிரம்பியது: நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் மக்கள் மகிழ்ச்சி

திருவில்லிபுத்தூர்: வடகிழக்கு பருவமழையால் திருவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. திருவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் மிகப்பெரியதாகும். இந்த கண்மாயை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையால் பெரியகுளம் கண்மாய் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. இதனால் இந்த பகுதியில் பல கிலோமீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மேரி என்பவர் கூறுகையில், கண்மாய் நிறைவதற்கு முன் போர்வெல்லில் தண்ணீர் மிக குறைவாக வரும். மேல்நிலை நீர்தேக்க தொட்டி நிரம்ப நேரம் ஆகும். ஆனால் தற்போது போர்வெல்லில் மிக அதிகளவு தண்ணீர் வருகிறது. விரைவாக நிரம்பி விடுகிறது. தற்போது திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. வருகின்ற கோடையை சமாளிக்கும் அளவிற்கு தண்ணீர் உள்ளது என தெரிவித்தார். திருவில்லிபுத்தூர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post திருவில்லிபுத்தூரில் தொடர் மழையால் பெரியகுளம் கண்மாய் நிரம்பியது: நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Thiruvilliputur ,Peryakulam ,Kanmai ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால்...