×

மான்களுக்கு போதிய குடிநீர் வசதி உள்ளதா? வெண்பாவூர் காப்பு காட்டில் கலெக்டர் நேரில் ஆய்வு

 

பெரம்பலூர்,டிச.2: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத் திற்குட்பட்ட வெண்பாவூர் காப்புக் காட்டில் உள்ள மான்களுக்கு போதிய குடிநீர் வசதி உள்ளதா என்பது குறித்து பெரம்ப லூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வேப்பந்தட்டை ஒன்றியத் திற்குட்பட்ட வெண்பாவூர் காப்புக்காட்டில் மான்கள் அதிகமாக வசித்து வருகி ன்றன.

எனவே மான்களுக்கு தேவையான குடிநீர் சேமித்து வைக்க போது மான குட்டைகள் உள்ளதா என்பது குறித்தும், மான்கள் காட்டை விட்டு தண்ணீ ருக்காக வெளியே வரும் நிலை இல்லாமல், போதுமான பாதுகாப்பு வசதிகள் உள்ளதா என்பது குறித்தும், காப்பு காட்டில் புதியதாக எவ்வளவு மரக்கன்றுகள் நடப்பட உள்ளன என்பது குறித்தும் மாவட்ட கலெக்டர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் வனக் கோட்டம், வேப்பந்தட்டை வனச்சரக கட்டுப் பாட்டிற்குள் அமைந்துள்ளது இந்த வெண்பாவூர் காப்புக்காடு. இந்த காப்புக்காடானது 721.18 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. இந்த காப்புக் காட்டில் புதியதாக வேம்பு, புங்கன், நீர்மருது, நாவல், இலுப்பை உள்ளிட்ட பல் வேறு வகையான சுமார் 2,500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

இந்த காப்புக் காட்டில் மான்கள் அதிகமாக வசித்து வருவதால் மான்கள் குடிநீர் அருந்தும் வகையில் 1 குடிநீர் குட்டை, தண்ணீரை சேமித்து வைக்க 14 தடுப்பணைகள், 5 கசிவு நீர்க் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.அதே போல 368.96 ஹெக்டர் பரப்பளவில் உள்ள மாவிலங்கை காப்புக் காட்டிலும் 2500 மரக்கன்று கள் நடுவதற்கு வனத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த காப்புக்காட்டில் வன விலங்குகள் தண்ணீர் பருக ஒரு குட்டை, 9 தடுப் பணைகள், 3 கசிவுநீர் குட்டைகள் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆய்வின் போது, வேப்பந்தட்டை வனச்சரக அலுவலர் சுதாகர், வனவர் அஜித்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமணி உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மான்களுக்கு போதிய குடிநீர் வசதி உள்ளதா? வெண்பாவூர் காப்பு காட்டில் கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Venpaur reserve ,Perambalur ,Vembavur reserve forest ,Veppanthatta ,Venpaur reserve forest ,Dinakaran ,
× RELATED குழந்தை திருமணம் செய்து வைத்தால்...