×

ஜெயங்கொண்டம் கோயில் வளாகத்தில் கட்டுமான பணிகள்

 

ஜெயங்கொண்டம், டிச.1: கோவில் செயல் அலுவலர் அலுவலக கட்டுமான பணி குறித்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் நகரில் பெரியநாயகி உடனுறை கழுமலைநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக கோயில் முன் உள்ள சுமார் 2421 சதுர அடி இடத்தில் செயல் அலுவலருக்கான அலுவலக கட்டிடம் கட்ட அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெறப்பட்டது.

இதையடுத்து தற்போது அடித்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று கடலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் பரணீதரன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மற்ற செயல்பாடுகளுக்கு உரிய இடம் இருப்பதை உறுதி செய்து கட்டிட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

The post ஜெயங்கொண்டம் கோயில் வளாகத்தில் கட்டுமான பணிகள் appeared first on Dinakaran.

Tags : Jayangondam temple complex ,Jayangkondam ,Charity Department ,Executive Officer ,Jayangkondam temple complex ,Dinakaran ,
× RELATED நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:...