×

மாவட்டத்தில் முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் 34 பேர் தேர்ச்சி

 

கோவை, டிச. 2: தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறனை கண்டறியும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு கடந்த அக்டோபரில் நடத்தப்பட்டது. இத்தேர்வினை கோவை மாவட்டத்தை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், மாநிலம் முழுவதும் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூபாய் ஆயிரம் வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இத்தேர்வில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 19 மாணவர்கள், 15 மாணவிகள் என மொத்தம் 34 பேர் தேர்ச்சி பெற்று ஊக்கத்தொகை பெற தகுதிப்பெற்றுள்ளனர்.

அதன்படி, மாணவிகளில் கோவை ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி கன்னிகா, கோவை மாடல் பள்ளியை சேர்ந்த ஷரீஸ்மா, ரீகாஸினி, கனிமொழி, அஞ்சலி, பெவினா பூஜா, மேட்டுப்பாளையம் பள்ளி ஷிவா பாத்திமா, சுண்டப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ராகவி, அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி அபிநயா, வெள்ளியங்காடு பள்ளி மாணவி பார்திஷா, திவ்யஸ்ரீ, யாழினி ராஜவீதி பள்ளி, சிறுமுகை காவியஸ்ரீ, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி அக்‌ஷிதா,

மலுமிச்சம்பட்டி ஷஜ்னா ஆகியோரும், மாணவர்களில் கோவை ஆண்கள் மாடல் பள்ளி நிதிஷ்குமார், ஹரிபிரசாத், சுலைமான், முரளி கிருஷ்ணன், சரண், முகில் கிருஷ்ணன், திவாகரன், பூபாலன், தென்பொன்முடி பள்ளி ஹனி, காளப்பட்டி சபரிஷ் மணிகண்டன், ஜேகப் பென்ஜமின், விஷ்ணுவரதன் களியண்ணன்புதூர், குனியமுத்தூர் பள்ளி அனீப், சிறுமுகை புதூர் சரண், தென்பொன்முடி பள்ளி சேர்ந்த தமிழரசன், ஆனைகட்டி அரசு பள்ளியை சேர்ந்த விக்னேஷ், கிணத்துக்கடவு பள்ளி ஹரிபிரியன், அசோகபுரம் பள்ளியை சேர்ந்த பூபேஷ், கணபதி பள்ளியை சேர்ந்த பாலகுரு உள்ளிட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

The post மாவட்டத்தில் முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் 34 பேர் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chief Minister Aptitude Test ,Coimbatore ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கோவை மாவட்டத்தில் வெப்ப அலை...