×

பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு மண்டல, மாநில வாரியான ரேங்க் வழங்கப்படவில்லை: சிபிஎஸ்இ அறிவிப்பு

சென்னை: சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கின்ற மாணவ, மாணவியருக்கு ஆண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. கடந்த காலங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடும்போது மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்கள், மண்டல அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர் பட்டியல் அல்லது மொத்த மதிப்பெண்களுக்கு இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளவர்கள் என்ற பட்டியல்கள் வெளியிடப்படும். இது மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் நிலை இருந்ததால் மதிப்பெண் தர வரிசை என்ற முறை நீக்கப்பட்டது.

இந்நிலையில், உயர்கல்வியில் சேரும் போதும், வேலை வாய்ப்பை பெறுகின்ற போதும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் கணக்கிடுவது என்ற பிரச்னை எழுந்துள்ளது. அதனால் அந்தந்த நிறுவனங்களே மாணவ, மாணவியருக்கு தகுதி மதிப்பெண்களை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், ‘‘சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகளில் மண்டல வாரியாகவோ, மாநில வாரியாகவோ மாணவ, மாணவியருக்கு தனித்துவத்தை வழங்ககூடாது.

ஒரு மாணவன் 5 பாடங்களுக்கு மேல் எடுத்து படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் அவற்றில் சிறந்த 5 பாடங்களில் மாணவர்கள் பெற்றிருக்கும் தகுதிகளை அந்தந்த கல்வி நிறவனங்கள் அல்லது வேலை வழங்கும் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து கொள்ளலாம். உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மதிப்பெண்களின் சதவீதம் தேவைப்பட்டால் அதை கணக்கிடும் முறை ஏதாவது இருந்தால் அந்த நிறுவனங்களே அதை கணக்கிட்டுக் கொள்ளலாம்’’ என்றார்.

The post பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு மண்டல, மாநில வாரியான ரேங்க் வழங்கப்படவில்லை: சிபிஎஸ்இ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CBSE ,CHENNAI ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில்...