×

கொலை, கொள்ளை வழக்கில் மோப்பநாய்கள் துப்பறிந்த வழக்குகள் என்ன? டிஐஜி, எஸ்பி நேரில் ஆய்வு வேலூர் மாவட்டத்தில்

வேலூர், நவ.2: வேலூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்கில் மோப்பநாய்கள் துப்பறிந்த வழக்குகள் என்ன? என்று டிஐஜி, எஸ்பி நேற்று நேரில் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு காவல்துறையில் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, ஆயுதப்படை, போக்குவரத்து பிரிவு, மோப்ப நாய் பிரிவு என்று பல்வேறு பிரிவுகள் உள்ளது. இந்த பிரிவுகளில் ஆண்டுதோறும் டிஐஜிகள், எஸ்பிக்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள். அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள மோப்பநாய் பிரிவில் வேலூர் சரக டிஜஜி முத்துசாமி, எஸ்பி மணிவண்ணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

மாவட்டத்தில் மோப்பா நாய் பிரிவில் வெடிகுண்டு வழக்குகளில் துப்பறிய அக்னி, குற்ற வழக்குகளில் துப்பறிய சாரா மற்றும் ஓய்வு பெற்ற லூசி, தேவைப்படும் பட்சத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மோப் நாய்கள் கொலை, கொள்ளை, வெடிகுண்டு என்று எந்தெந்த வழக்குகளில் துப்புதுலக்கியுள்ளது. உரிய பயிற்சி வழங்கப்படுகிறதா? கால்நடை மருத்துவர்கள் வந்து மோப்ப நாய்களை பரிசோதனை செய்தார்களா? மோப்பாய் பராமரிக்கும் காவலர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா? உணவு சரியாக வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். மோப்பநாய் பிரிவு கட்டிடம் 1994ம் ஆண்டு கட்டப்பட்டது. எனவே புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க உயர்அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படும் என்று டிஐஜி தெரிவித்தார். அதோடு சிறப்பாக செயல்பட்ட மோப்பாய் நாய்களின் பராமரிப்பாளர்களுக்கு பணப்பரிசும் வழங்கப்பட்டதாக டிஐஜி முத்துசாமி தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ரமேஷ், ஆயுதப்படை டிஎஸ்பி சரவணன், எஸ்ஐ ெஜரால்டு வில்சன் ஆகியோர் இருந்தனர்.

The post கொலை, கொள்ளை வழக்கில் மோப்பநாய்கள் துப்பறிந்த வழக்குகள் என்ன? டிஐஜி, எஸ்பி நேரில் ஆய்வு வேலூர் மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : DIG ,SP ,Vellore ,District ,Vellore district ,DIG, SP ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை