×

காங்கிரஸ் எம்பியாக ஆசை… தலைவராக பேராசை…கார்த்தி சிதம்பரம் ‘ஓபன் டாக்’

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருக்கடையில் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் நேற்று அளித்த பேட்டி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்பது ஒரு ஆருடம் தான். என்னுடைய கணிப்புபடி 5 மாநில தேர்தல்களில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். கவர்னர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளை முடக்குவது ஆளுநருக்கு வேலையல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் சட்டங்களை ஒப்புதல் அளிக்காமல் இருப்பதும் ஆளுநருக்கு வேலை அல்ல என்று தெளிவாக கூறியுள்ளது.

இந்த அரசுக்கு ஒரு முட்டுக்கட்டை போட வேண்டும், வில்லங்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஏதாவது ஒரு வகையில் ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார். இந்தியா கூட்டணியில் புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இங்கிருந்து எந்த கட்சியும் வெளியேறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் எம்பியாக போட்டியிடவும் ஆசை உள்ளது. அதே சமயம் தமிழக காங்கிரசின் தலைவராக பொறுப்பேற்கவும் பேராசை உள்ளது.

10 ஆண்டுகளாக பாஜவோடு கூட்டணியில் இருந்து விட்டு சில காலங்களாக கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம் என்று கூறுவதால் மட்டும் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்துவிடாது. சிறுபான்மையினர் மக்கள் மிகத்தெளிவாக உள்ளனர். காங்கிரஸ் எந்த கூட்டணியில் உள்ளதோ அவர்களுக்குத்தான் சிறுபான்மையினரின் வாக்குக்கள் கிடைக்கும். அமலாக்கத்துறையை கட்டுப்படுத்த வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.

The post காங்கிரஸ் எம்பியாக ஆசை… தலைவராக பேராசை…கார்த்தி சிதம்பரம் ‘ஓபன் டாக்’ appeared first on Dinakaran.

Tags : Congress ,Karthi Chidambaram ,Pudukottai ,Sivaganga ,Tirukkadai, Pudukottai district ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்