×

மபியில் பா.ஜ வென்றால் முதல்வர் பதவி யாருக்கு? சிவராஜ்சிங் சவுகான் பதில்

குவாலியர்: மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ வென்றால் முதல்வர் பதவி யாருக்கு என்பது குறித்து சிவராஜ்சிங் சவுகான் பதில் அளித்துள்ளார். மபி உள்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மபியில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் மாற்றப்படுவார் என்று தகவல் வெளியானது. அவரை முன்னிறுத்தி இந்த தேர்தலை பா.ஜ சந்திக்கவில்லை. இந்த நிலையில் கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் மபியில் பா.ஜ வென்றால் முதல்வர் பதவி யாருக்கு என்று சிவராஜ்சிங் சவுகானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் எந்தவித பதிலும் அளிக்காமல்,’ பாரதிய ஜனதா ஜிந்தாபாத்’ என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,’ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் ம.பி., மக்களை சென்றடைந்ததால், பா.ஜ., பிரமாண்டமான வெற்றியை பெறும். இரட்டை இயந்திர அரசுகளால் மபி வளர்ச்சி அடைந்துள்ளது’ என்றார்.

The post மபியில் பா.ஜ வென்றால் முதல்வர் பதவி யாருக்கு? சிவராஜ்சிங் சவுகான் பதில் appeared first on Dinakaran.

Tags : BJP ,Mabi ,Minister ,Shivraj Singh Chauhan ,Shivraj Singh Chouhan ,Madhya Pradesh assembly election.… ,
× RELATED பாஜக குதிரை பேரத்தை தடுக்க நம்பிக்கை...