×

ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் ஓரிரு நாட்களில் முழு அரசியலில் ஈடுபடுவேன்: சந்திரபாபு பேட்டி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் ஓரிரு நாட்களில் முழு அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறினார். திறன் மேம்பாட்டு முறைகேடு வழக்கில் ஜாமீனில் விடுதலை ஆன தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஏழுமலையான் கோயிலில் தனது குடும்பத்தினருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது: 2003ம் ஆண்டு அரசு சார்பில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பட்டு வஸ்திரம் கொண்டு வந்த என் மீது அலிபிரி அருகே குண்டு வைத்து கொல்ல முயற்சி நடந்தது. இதிலிருந்து வெங்கடேஸ்வர சுவாமி எனக்கு உயிர் பிச்சை வழங்கினார். எனது குலதெய்வம் வெங்கடேஸ்வர சுவாமி என்பதால் நான் எப்போதும் எந்த பணி தொடங்கினாலும் அவரை வணங்கிய பின்பு தொடங்குவேன். அதேபோன்று எனக்கு சிரமமான காலக்கட்டத்தில் வெங்கடேஸ்வர சுவாமியை வேண்டி கொண்டேன். அதன்படி தற்போது குடும்பத்துடன் ஏழுமலையானை வேண்டிக் கொண்டேன். எனது சிரமமான காலக்கட்டத்தில் எனக்கு ஆதரவாக இருந்தவர்கள் மற்றும் உலகம் முழுவதும் இருந்தவர்கள் ஆதரவளித்தனர். இங்கு அரசியல் பேச விரும்பவில்லை. இன்னும் 2, 3 கோயில்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. அதன் பிறகு முழு அரசியலில் ஈடுபட உள்ளேன்”. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் ஓரிரு நாட்களில் முழு அரசியலில் ஈடுபடுவேன்: சந்திரபாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Swami darshan ,Eummalayan temple ,Chandrababu ,Tirumala ,Chandrababu Naidu ,Swami ,Tirupati Eyumalayan Temple ,Yehumalayan Temple ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட்...