×

திருப்பதி கோயிலில் தரிசனம் தீவிர அரசியல் சுற்றுப்பயணம்: சந்திரபாபு நாயுடு பேட்டி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு ஓரிரு நாட்களில் தீவிர அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபுநாயுடு ேநற்று ஐதராபாத்தில் இருந்து திருப்பதிக்கு வந்தார்.

இதையடுத்து திருமலைக்கு தனது குடும்பத்துடன் வந்த சந்திரபாபு, அங்குள்ள வராக சுவாமியை தரிசனம் செய்தார். பின்னர் கெஸ்ட் ஹவுசில் தங்கிய அவர், இன்று அதிகாலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கடந்த 2003ம் ஆண்டு அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை சமர்பிப்பதற்காக வந்த என் மீது திருப்பதி மலைப்பாதையில் வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றனர். அப்போது வெங்கடேஸ்வர சுவாமி எனக்கு உயிர் பிச்சை வழங்கினார். எனது குலதெய்வம் வெங்கடேஸ்வர சுவாமி என்பதால், நான் எப்போதும் எந்த பணி தொடங்கினாலும் அவரை வணங்கிய பின்புதான் தொடங்குவேன்.

கோயில் வளாகத்தில் எவ்வித அரசியலும் பேச விரும்பவில்லை. இன்னும் சில கோயில்களுக்கு சென்று வந்த பின்னர் தீவிர அரசியல் சுற்றுப்பயணம் தொடங்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதையொட்டி சந்திரபாபு தனது குலதெய்வமான ஏழுமலையானை பிரார்த்தனை செய்துவிட்டு தீவிர பிரசாரம் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

The post திருப்பதி கோயிலில் தரிசனம் தீவிர அரசியல் சுற்றுப்பயணம்: சந்திரபாபு நாயுடு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Daryanam Intense Political Tour ,Tirupathi Temple ,Chandrababu Naidu ,Thirumalai ,AP ,Chandrababunayud ,Tirupathi Elumalayan Temple ,Darshan Intense Political Tour ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...