×

பழமையான கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடங்கள் பொது தீட்சிதர்களால் கட்டப்படுவதை தடை செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை மனு

கடலூர்: கடலூர் மாவட்டம், சிதம்பரம், அருள்மிகு சபாநாயகர் திருக்கோயிலில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி வல்லுநர் குழு மற்றும் ஆணையர் அனுமதி பெறாமல் பழமையான கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடங்கள் பொது தீட்சிதர்களால் கட்டப்படுவதை தடை செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேற்கண்ட மனு நீதியரசர்கள் திரு.ஆர்.மகாதேவன் மற்றும் திரு.பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு இன்று (01.12.2023) வரப்பெற்றது.

விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் திரு.N.R.R.அருண் நடராஜன் அவர்கள், அனுமதியின்றி கட்டப்பட்டுவரும் கட்டுமானங்கள் குறித்த புகைப்படங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்கு பொது தீட்சிதர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேற்கொண்டு கட்டுமானப் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாது என உத்தரவாதம் அளித்ததை பதிவு செய்து கொண்டு வழக்கின் விசாரணையை எதிர்வரும் 06.12.2023 (புதன் கிழமை) தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post பழமையான கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடங்கள் பொது தீட்சிதர்களால் கட்டப்படுவதை தடை செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை மனு appeared first on Dinakaran.

Tags : Hindu Charitable Trusts ,Cuddalore ,Arulmiku Sabanayakar ,Chidambaram ,Cuddalore district ,Court ,
× RELATED மாநகராட்சி ஆணையரை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு