×

சிதம்பரம் கோயில் கட்டுமானம் – ஐகோர்ட் கேள்வி


சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது? என்று பொது தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 4 கோபுரங்கள் உள்ள பகுதி, 1, 2-ம் பிரகாரங்களில் எந்த அனுமதியுமின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அனுமதியில்லாமல் செய்யப்டும் கட்டுமானங்களுக்கு தடை விதிக்கக் கோரி இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை டிச.6-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

The post சிதம்பரம் கோயில் கட்டுமானம் – ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Chidambaram Temple ,CHENNAI ,Chidambaram Nataraja Temple ,Madras High Court ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு...