×

உலக பருவநிலை பாதுகாப்பு மாநாடு: துபாயில் பிரதமர் மோடி உரை

துபாய்: துபாயில் நடைபெறும் பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இன்று அதிகாலை சென்றடைந்தார்.ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் நடைபெறும் ‘காப்28’ என்ற உலக பருவநிலை பாதுாப்பு நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு நேற்று தொடங்கியது. வரும் 12ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், ‘கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயு உமிழ்வை குறைத்தல், கடுமையான பருவநிலை மாற்ற பாதுகாப்புகளை எதிா்கொள்ள வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவுவது’ உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி நேற்றிரவு துபாய் சென்றடைந்தார். அவருக்கு அங்கே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக, துபாய் புறப்படுவதற்கு முன்பாக இதுகுறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி, ‘இந்தியா ஜி20 நாடுகள் அமைப்பின் தலைமை பொறுப்பை வகித்தபோது பருவநிலை பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டது. அந்த வகையில், பருவநிலை பாதுகாப்புக்கு இந்தியா எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது’ என்றார். துபாய் சென்றடைந்தபின் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘காப்28 மாநாட்டில் பங்கேற்பதற்காக துபாய் வந்தடைந்தேன். பூமியை சிறந்த கோளாக உருவாக்கும் இந்த மாநாட்டின் கருத்தரங்கில் பங்கேற்க ஆவலாக உள்ளேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். துபாயில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் பிரதமர் மோடி, இன்றிரவு டெல்லி திரும்புகிறார்.

The post உலக பருவநிலை பாதுகாப்பு மாநாடு: துபாயில் பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.

Tags : Global Climate Protection Conference ,PM Modi ,Dubai Dubai ,Modi ,United Arab Emirates ,Climate Security Conference ,Dubai ,World Climate Security Conference ,Dinakaran ,
× RELATED போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...