×

திருவள்ளூரில் சோகம் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த ஊராட்சி தலைவர் பலி

திருவள்ளூர்: ராணிப்பேட்டை மாவட்டம் சித்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் வெங்கடேசன் (எ) வெங்கட்ராமன் (57). இவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பார்த்து விட்டு நேற்றிரவு அரக்கோணம் செல்வதற்காக திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்து கொண்டிருந்த புறநகர் மின்சார ரயில் திருவள்ளூரில் நின்றது. அதில் வெங்கடேசன் ஏற முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகலறிந்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post திருவள்ளூரில் சோகம் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த ஊராட்சி தலைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Venkatesan (A) Venkatraman ,Chittoor Panchayat Council ,Ranipet ,Panchayat ,Pali ,
× RELATED ரூ.33 கோடி மதிப்பில் வேடங்கிநல்லூரில்...