×

வடகிழக்கு பருவமழை எதிரொலி: ஆரணி உட்கோட்டத்தில் 33 ஏரிகள் நிரம்பின.. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்..!!

திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் ஆரணி உட்கோட்டத்தில் 33 ஏரிகள் நிரம்பியதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியக்கா பெய்து வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் கடந்த 6 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் உற்பத்தியாகும் கமண்டல நாக நதி ஆற்றில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் ஆரணி பொதுப்பணித்துறை உட்கோட்டத்தில் உள்ள 172 ஏரிகளில் அய்யம்பாளையம், குன்னத்தூர், மலையாம்பட்டு, ராட்டினமங்கலம், அக்காரபாளையம் உள்பட 33 ஏரிகள் நிரம்பியதாக ஆரணி பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் ஓரிரு நாட்கள் தொடர்மழை பெய்தால் மேலும் 30 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதனிடையே இந்த 33 ஏரிகள் நிரம்பியுள்ளதால் 5,000க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்று அந்த பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

The post வடகிழக்கு பருவமழை எதிரொலி: ஆரணி உட்கோட்டத்தில் 33 ஏரிகள் நிரம்பின.. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : North East Monsoon ,Arani Utkotam ,Tiruvallur ,Public Works Department ,
× RELATED மெட்ரோ ரயில் பணி இடங்களில் மாற்று...