×

திருப்பூர் சேவூர் போத்தம்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை தீவிர சோதனை


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சேவூர் போத்தம்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து போத்தம்பாளையத்தில் சென்னியப்பன் காட்டுப் பாறை என்ற இடத்தில் இரு சிறுத்தைகளை அப்பகுதி வழியாக சென்ற அதே பகுதியை சேர்ந்த வளர்மதி என்பவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் வரும் போது பார்த்ததாகவும் நாயை துரத்தி வந்த சிறுத்தைகள் இரண்டும் வண்டியை பார்த்ததும் சோளக் காட்டிற்குள் புகுந்து ஓடிவிட்டதாக தகவல் கூறியதை அடுத்து திருப்பூர் வனசரக அலுவலர், வருவாய்த் துறையினர் மற்றும் சேயூர் காவல் துறையினர் சம்பது இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சோளக் காட்டில் சில காலடித்தடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் காட்டுத்தீ போல் பரவி அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் கூடியுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. கடந்த 2021 -ம் ஆண்டு இதே பகுதி அருகில் உள்ள பாப்பாங்குளம் பகுதியில் ஒரு சிறுத்தை இருவரை தாக்கியது குறிப்பிடத்தக்கது.

The post திருப்பூர் சேவூர் போத்தம்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை தீவிர சோதனை appeared first on Dinakaran.

Tags : Saveur Bothampalayam ,Tirupur ,Forest Department ,Tirupur district ,Department ,
× RELATED கடும் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம்