×

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.18 கோடி கொள்ளை..!!

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.18 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையானது கரன்சி பெட்டகம், உக்ருல் மாவட்டத்திற்கான வங்கிகள் மற்றும் ஏடிஎம்களுக்கான பணத்தை இந்திய ரிசர்வ் வங்கி சேமித்து வைக்கும் இடமாகும். மாநிலத் தலைநகர் இம்பாலில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ளது.

இந்த வங்கியில் அன்றைய பணப் பரிவர்த்தனை முடிந்து வங்கி ஊழியர்கள் பணத்தை எண்ணிக் கொண்டிருந்த போது, 8 முதல் 10 பேர் வரை ஆயுதம் ஏந்திய நபர்கள் நேற்று மாலை 5.30 மணிக்கு நுழைந்து அங்குள்ள பணியாளர்கள் மற்றும் PNB கிளை ஊழியர்களை தாக்கினர்.

மேலும் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் துப்பாக்கி முனையில் வைத்தும் கயிறுகளால் கட்டியும் பணத்துடன் தப்பியோடினர். உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையிலான பாதுகாப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

The post மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.18 கோடி கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Punjab National Bank ,Ukrul district ,Manipur ,Punjab National… ,Dinakaran ,
× RELATED மெய்தி பிரிவினரை பழங்குடியினர்...