×

ஜார்க்கண்டில் போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் மசோதா : ஆளுநர் ஒப்புதல்!!

ராய்ப்பூர் : ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின்போது நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் கடுமையான தண்டனை வழங்கும் சட்ட மசோதா ஜார்க்கண்ட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும் சட்டப்பேரவையில் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.இந்த புதிய சட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளில் முதல்முறை முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். தேர்வுகளில் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும் மாணவர்கள் 10 ஆண்டுகள் வரை போட்டித் தேர்வுகளை எழுதவும் முடியாது. இதே போல் பல்வேறு மோசடிகளுக்கு ஆயுள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் இந்த சட்டத்தின் கீழ் விதிக்க முடியும்.

 

The post ஜார்க்கண்டில் போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் மசோதா : ஆளுநர் ஒப்புதல்!! appeared first on Dinakaran.

Tags : Bill ,Jharkhand ,Raipur ,Maharashtra ,Governor ,C. B. Radhakrishnan ,
× RELATED ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா...