×

பெரியகுளத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 

பெரியகுளம், டிச. 1: தேனி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள் உள்ளிட்டவைகளை அகற்றி சாலையை அகலப்படுத்தி விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை பகுதி தேனி- திண்டுக்கல் நெடுஞ்சாலையின் இரு பகுதிகளிலும் உள்ள வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று நெடுஞ்சாலைத் துறையினர் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வடிகால் மற்றும் தரைதளங்களை இடித்து அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர். அப்பொழுது சில கடை உரிமையாளர்கள் தங்களுக்கு முறையான தகவல் வரவில்லை எனக் கூறி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிக்காக தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது.

The post பெரியகுளத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Theni district ,
× RELATED தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காரும்...