- சின்னூர் மலை
- பெரியகுளம்
- தேனி மாவட்டம்
- சின்னூர் மலை
- சின்னூர், பெரியூர்
- மேற்குத்தொடர்ச்சி
- பெரியகுளம், தேனி மாவட்டம்
- தின மலர்
பெரியகுளம், ஜூலை 16: சின்னூர் மலை கிராமத்திற்கு புதிய சாலை அமைக்கும் பணிக்காக தேனி மாவட்ட பகுதியில் நில அளவை பணியை வருவாய்த் துறையினர் மேற்கொண்டனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சின்னூர், பெரியூர் மலை கிராமம் உள்ளது. இந்த மலை கிராமங்கள் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகாவில் வெள்ளகெவி ஊராட்சியில் இருந்தாலும் சின்னூர் மலை கிராம மக்களின் போக்குவரத்து என்பது பெரியகுளம் பகுதியைச் சார்ந்தே உள்ளது.
இதனால் இந்த மலை கிராம மக்கள் சாலை வசதி இன்றி தவித்து வருவதும், மழைக்காலங்களில் அவர்கள் உணவுப் பொருட்கள் வாங்கவும், விவசாய விளை பொருட்களை விற்க முடியாமல் இருந்து வரும் நிலையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி கோரி வந்தனர்.இதனிடையே இன்று கல்லாற்றில் தேனி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலை அமைக்கும் பணிகளுக்காக நில அளவீடு பணிகளை தேனி மாவட்ட வருவாய் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.மேலும் நில அளவீடு பணிகள் முடிவடைந்து விரைவில் சாலை அமைக்க மற்றும் பாலம் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டு சாலைப் பணிகளும் கல்லாற்றில் பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற உள்ளதாக அளவீடு பணியில் ஈடுபட்ட வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post சின்னூர் மலைக்கிராமத்திற்கு சாலை அமைக்க நில அளவை பணி தொடங்கியது appeared first on Dinakaran.