×

அரசு மகளிர் பணியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் செக் மோசடி வழக்கு இளைஞருக்கு 6 மாத சிறை

தஞ்சாவூர், டிச.1: பட்டுக்கோட்டையில் செக் மோசடி வழக்கில் இளைஞருக்கு ஆறுமாதம் சிறைத்தண்டனை விதித்து பட்டுக்கோட்டை நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்தியா உத்தரவிட்டார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புக்கரம்பயைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் ராமநாதன் (37). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காட்டுத் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் முகமது ஆரிப் (63) என்பவருக்கு கடந்த 8-12-2022ஆம் தேதி ரூ.4 லட்சத்தை கடனாக கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஒரு மாதத்தில் கடனை திருப்பி தந்து விடுவதாக கூறிச் சென்ற முகமது ஆரிப் நீண்ட நாட்களாக பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஒரு கட்டத்தில் 4 லட்சத்திற்கான செக்கை முகமது ஆரிப் ராமநாதனுக்கு கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஆரிப் கொடுத்த காசோலையை ராமநாதன் வங்கியில் கலெக்ஷனில் போட்டபோது முகமது ஆரிப் வங்கி கணக்கில் பணம் இல்லாதது தெரிய வந்தது. இதைஅடுத்து ராமநாதன் வழக்கறிஞர் கேத்தரின் ஜெனிபர் மூலம் பட்டுக்கோட்டை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியா, முகமது ஆரிப் குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு ஆறு மாத சிறை தண்டனையும், 4 லட்சத்து பத்தாயிரம் ரூபாய் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறும் பட்சத்தில் ஆறு மாதத்துடன் கூடுதலாக இரண்டு மாதம் சிறை தண்டனையும் அளித்து உத்தரவிட்டார்.

The post அரசு மகளிர் பணியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் செக் மோசடி வழக்கு இளைஞருக்கு 6 மாத சிறை appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Pattukottai ,Magistrate ,Judge ,Satya ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...