×

குஜராத்தில் காலாவதியான ஆயுர்வேத மருந்து உட்கொண்ட 5 பேர் பலி

நாடியாட்: குஜராத் மாநிலம் கேடியா மாவட்டத்தில் நாடியாட் அருகே பிலோதரா கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் கல்மேகசவ் அசவா அரிஷ்டா என்னும் ஆயுர்வேத மருந்தை வாங்கி உள்ளனர். கடந்த 2 நாட்களில் அதனை குடித்தவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மெத்தில் ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் காலாவதியான மருந்தை குடித்ததால் அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, ஆல்கஹால் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்த இறந்தவர்களின் ரத்த மாதிரியை போலீசார் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக கடை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post குஜராத்தில் காலாவதியான ஆயுர்வேத மருந்து உட்கொண்ட 5 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Nadiad ,Kalmegasav Asava Arishta ,Pilothara ,Kedia district ,
× RELATED அப்பாவி உயிர்கள் போன பிறகு செயல்படும்...