×

சட்டீஸ்கரில் நாங்க தான்..இல்ல..இல்ல.. நாங்க தான்.. கருத்துக்கணிப்பு முடிவுகளால் முட்டி மோதும் காங்கிரஸ் – பா.ஜ

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு தெரிவித்தாலும், நாங்களும் வெற்றி பெறுவோம் என்று பா.ஜவும் தெரிவித்து உள்ளது. சட்டீஸ்கர் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து ராய்ப்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பூபேஷ் பாகேல், ‘ கருத்துக்கணிப்பு தொடர்பான அனைத்து முடிவுகளிலும் ஒற்றுமை உள்ளதா? ஆனால் நாங்கள் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்.

எங்கள் கட்சி 57 முதல் 75 தொகுதிகள் வரை வெற்றி பெறும். பாஜவின் குதிரை பேர முயற்சிகளைத் தடுக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. ஏனெனில் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்பு இல்லை. அதனால் பா.ஜவால் அதைச் செய்ய முடியாது. எங்கள் முயற்சிகள் மீதும், மக்கள் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது’ என்றார்.

ஆனால் சட்டீஸ்கர் முன்னாள் முதல்வரும், பாஜ மூத்த தலைவருமான ராமன் சிங் கூறுகையில்,’ எங்கள் கட்சி 52 முதல் 55 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கருத்துக்கணிப்பு முடிவு அடிப்படையில் பாஜ தற்போது உள்ள 15 இடங்களிலிருந்து 48 இடங்களை எட்டுகிறது. ஆனால் பாஜ 52 முதல் 55 இடங்களைப் பெறும் என்று நம்புகிறேன். டிச.3ல் தெளிவாக தெரியும்’ என்றார்.

The post சட்டீஸ்கரில் நாங்க தான்..இல்ல..இல்ல.. நாங்க தான்.. கருத்துக்கணிப்பு முடிவுகளால் முட்டி மோதும் காங்கிரஸ் – பா.ஜ appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Congress ,BJP ,Raipur ,Congress party ,
× RELATED போலீஸ்காரர் வெட்டி கொலை சட்டீஸ்கரில் நக்சல்கள் அராஜகம்