×

ஒன்றிய அரசின் கொள்கைகளால் பொருளாதாரத்தில் இந்தியா புதிய உச்சம்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகள் நாட்டின் பொருளாதாரத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

ஒன்றிய அரசின் ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் 51000 பேருக்கு பணிநியமன கடிதங்களை வழங்கும் விழா காணொலி காட்சி வாயிலான நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற நியமன ஆணைகளை வழங்கிய பின்னர், பிரதமர் மோடி பேசுகையில், ‘‘நலிவடைந்த மக்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்யுங்கள். இது 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும். மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கே முன்னுரிமை. ஒன்றிய அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகள் தான் பொருளாதாரத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்பு தலைமுறையை உருவாக்கியுள்ளது” என்றார். மேலும் மலிவு விலையில் மருந்து கடைகளை 10ஆயிரத்தில் இருந்து 25ஆயிரமாக அதிகரிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்தியா அசாதாரண சாதனை
ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஒரு ஆண்டு வகித்து வந்தது. இதனை தொடர்ந்து ஜி20யின் தலைமை பொறுப்பை இன்று முதல் பிரேசில் அதிகாரப்பூர்வமாக ஏற்கிறது. இதனையொட்டி இந்தியாவின் ஜி20 தலைமை பொறுப்பு பயணம் குறித்து பிரதமர் மோடி கூறுகையில்,‘‘ஜி20 தலைவர் பதவியில் இருந்தபோது இந்தியா பன்முகத்தன்மைக்கு புத்துயிர் அளித்து, உலகளாவிய குரலை வலுப்படுத்தியது, வளர்ச்சியை ஊக்குவித்தது. அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு அதிகாரமளிக்க போராடியது. ஜி20 தலைமை பதவியில் இருந்தபோது இந்தியா அசாதாரண சாதனைகளை படத்துள்ளது. பொதுமக்கள், கிரகம், அமைதி மற்றும் செழிப்புக்கான நமது கூட்டு நடவடிக்கைகள் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தியா தனது பொறுப்பை ஒப்படைக்கும்” என்றார்.

துபாய் புறப்பட்டார் மோடி
உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு துபாயில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்று துபாய் புறப்பட்டார். இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பங்கேற்கிறார்கள். பிரதமர் மோடி 3 உயர் மட்ட நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.

The post ஒன்றிய அரசின் கொள்கைகளால் பொருளாதாரத்தில் இந்தியா புதிய உச்சம்: பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : India ,Union Government ,PM Modi ,New Delhi ,Modi ,
× RELATED குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட...