×

‘மசாஜ், கால் கேர்ஸ்’ என ஆசை காட்டி பல லட்சம் சுருட்டல்: துபாய் விடுதியில் நடனமாட வற்புறுத்திய சினிமா டான்சர்கள், இளம்பெண், பொள்ளாச்சி கும்பல் கைது

கோவை: ‘லொக்காண்டா’ ஆப்பில் வரும் தகவல், விவரங்களை கேட்பவர்களை குறி வைத்து அவர்களிடம் தொலைபேசியில் பேசி மசாஜ், கால் கேர்ஸ் என பல்வேறு தேவைகளுக்கு உங்கள் பகுதியில் உள்ள ஓட்டல், ரிசார்ட் என தேவையான இடங்களுக்கு பெண்கள் வருவார்கள்’ என கூறி அழகான பெண்களின் ஆபாச போட்டோ, அவர்களின் விவரங்களை அனுப்பி பணம் பறிக்கும் மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டு வந்தது. இதில் கோவையை சேர்ந்த 43 வயதான நபர் ஆயுர்வேத மசாஜ் பெற விரும்பி ₹8.25 லட்சம் இழந்தார்.

அவர் அளித்த புகாரின்பேரில் மோசடியில் ஈடுபட்ட பொள்ளாச்சியை சேர்ந்த ஹரிபிரசாத் (31), மகேந்திரன் (26), சக்திவேல் (25), ஈரோட்டை சேர்ந்த சரவணமூர்த்தி (23), திருப்பூரை சேர்ந்த அருண்குமார் (24), மற்றொரு சக்திவேல் (29), ஜெயபாரதி (22), மகேந்திரன் (30), கோகுல் (31) ஆகியோரை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இந்த கும்பல் மும்பை, பெங்களூர், கோவா உள்ளிட்ட பகுதியில் தங்கி மோசடியில் ஈடுபட்டதும், இதற்காக புதிதாக சிம்கார்டுகள் வாங்கி, புதிய வங்கி கணக்கு துவக்கி பணம் பெற்றதும் தெரியவந்தது.

இதேபோல், துபாய் சென்றால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி திருப்பூரில் உள்ள 19 வயது இளம்பெண்களை தோழி ஒருவர் சினிமா நடன கலைஞர்கள் துபாய்க்கு அனுப்பி உள்ளார். துபாய் சென்ற இளம்பெண்களை அங்குள்ள நடனவிடுதியில் நடமாடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். அது அந்த இளம்பெண்களுக்கு பிடிக்காததால் இது குறித்து திருப்பூரில் உள்ள தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். அவர்கள் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து துபாயில் சிக்கி தவித்த இளம்பெண்களை மீட்டு, துபாய்க்கு அனுப்பிய 20 வயது தோழி மற்றும் சென்னையை சேர்ந்த சினிமா நடன கலைஞர்களான நித்தி (22), மோகன் (31), நவீன் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

The post ‘மசாஜ், கால் கேர்ஸ்’ என ஆசை காட்டி பல லட்சம் சுருட்டல்: துபாய் விடுதியில் நடனமாட வற்புறுத்திய சினிமா டான்சர்கள், இளம்பெண், பொள்ளாச்சி கும்பல் கைது appeared first on Dinakaran.

Tags : Dubai ,Pollachi ,Govai ,Pollachi Gang ,
× RELATED துபாய் ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றது சினியகோவா ஜோடி