×

திமுக பெண் நிர்வாகி குறித்து ஆபாச பதிவு பாமக பிரமுகர் கைது

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சியை கைவிடக்கோரி பாமகவினர் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, பாமக முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் அமைச்சர் எ.வ.வேலு குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கணேஷ்குமார் பெயரை குறிப்பிட்டு, வந்தவாசியை சேர்ந்த திமுக மாவட்ட சமூக வலைதள பிரிவு துணை அமைப்பாளர் ரீனா இளவரசி(40) சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக தெரிகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக வந்தவாசி கிழக்கு ஒன்றிய பாமக முன்னாள் செயலாளர் பிரபுதேவா( 27), ரீனா இளவரசியின் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ஆபாச வார்த்தைகளுடன் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ரீனா இளவரசி அளித்த புகாரில் பிரபுதேவாவை போலீசார் கைது செய்தனர்.

The post திமுக பெண் நிர்வாகி குறித்து ஆபாச பதிவு பாமக பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Tags : DMK ,Vandavasi ,Bamakavins ,Siyaru Chipkat ,Tiruvannamalai district ,
× RELATED வந்தவாசி பகுதியில் பெய்த இடியுடன் கூடிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி