×

3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 21 ஆண்டு சிறை

ஊட்டி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி (52). இவர், அங்குள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி அன்று இவர் அந்தப்பகுதியில் உள்ள புல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது மதிக்கத்தக்க 3 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஊட்டி மகிளா நீதிமன்றம், நேற்று தீர்ப்பு அளித்தது. இதில், சக்திக்கு தலா 7 ஆண்டுகள் வீதம் 21 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹4,500 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஜாமீனில் வெளியே இருந்த, சக்தியை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

The post 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 21 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Shakti ,Manjur ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED இச்சா சக்தி, கிரியா சக்தி; ஞான சக்தி என்பது யாது?