×

ஹஜ் பயண நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி விட்டது: எடப்பாடி ‘சவுண்டு’

சேலம்: சேலத்தில் பல்வேறு கட்சியினரை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அதிமுகவில் இணையும் விழா, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, பாஜ கூட்டணியில் இருந்தோம். தற்போது அதில் இருந்து வெளியே வந்து விட்டோம். பாஜவின் கொள்கை வேறு.

அதிமுகவின் கொள்கை வேறு. எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்து கொடுத்த கொள்கையில் இருந்து அதிமுக விலகாது. அதிமுகவில் சாதி, மதம் கிடையாது. இஸ்லாமிய மக்களுக்கு, எனது ஆட்சி காலத்தில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளேன். ஒன்றிய பாஜ அரசு, ஹஜ் பயணத்திற்கான நிதியை நிறுத்தி விட்டது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, மசூதியில் இஸ்லாமியர்களுடன் எடப்பாடி பழனிசாமி தொழுகை நடத்தினார்.

The post ஹஜ் பயண நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி விட்டது: எடப்பாடி ‘சவுண்டு’ appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Edappadi ,Sound ,Salem ,Muslims ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,
× RELATED செங்கோல் விவகாரம் : ஒன்றிய அரசு நாடகம்: எடப்பாடி பேட்டி