×

கணக்கனேந்தல் கிராமத்தில் பாழடைந்து கிடக்கும் அங்கன்வாடி மையம்: வாடகை கட்டிடத்தில் படிக்கும் குழந்தைகள்

 

காரியாபட்டி, டிச.1: காரியாபட்டி அருகே அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்ததால் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. காரியாபட்டி அருகே கணக்கனேந்தல் கிராமத்தில் கடந்த 2017ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த ஊரை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் புதிய கட்டிடத்தில் படித்து வந்தனர். இந்நிலையில் அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்குள் சேதமாகி இடிந்து விடும் நிலையில் இருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அங்கன்வாடி மைய கட்டிடம் மேலும் பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் காணப்படுகிறது. கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்துவிடும் பயத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் மையத்துக்கு படிக்க அனுப்பாமல் இருந்தனர். பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஊரில் ஊட்டச்சத்து திட்ட அலுவலர்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து மையத்தை நடத்த ஏற்பாடு செய்தனர். அதன்படி கடந்த 3 ஆண்டுகாலமாக வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் அங்கன்வாடிக்கு தனியாக கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கணக்கனேந்தல் கிராமத்தில் பாழடைந்து கிடக்கும் அங்கன்வாடி மையம்: வாடகை கட்டிடத்தில் படிக்கும் குழந்தைகள் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Kappanendal village ,Kariyapatti ,Kariyapatti… ,Anganwadi center ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை