×

அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம்: சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘சட்டமன்ற நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி தலைமை தாங்கினார். துணை தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், நகராட்சி ஆணையாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு பொருட்கள், பாராட்டு சான்று மற்றும் பதக்கங்கள் ஆகியவற்றை அப்பாவு வழங்கினார். அப்போது அவர், திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் அடைந்துள்ள பல்வேறு வளர்ச்சிகள் குறித்து பள்ளி மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். இதில், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின்னர், சபாநயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை, மோடியின் நண்பர் அதானி, நிலக்கரி இறக்குமதி செய்ததில் ரூ.813 கோடி அரசுக்கு இழப்பு ஏற்ப்படுத்தியதற்கு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், அதானி நிறுவனம் சோலார் மூலம் ரூ.756 மெகா வாட் மின்சாரம் வழங்கியதில், மின்வாரிய துறைக்கு ரூ.20ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல், கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் வங்கியில் கோடிக்கணக்கான ரூபாயை கடனாக பெற்றுக்கொண்டு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளவர்களின் கடன்களை அரசே ரத்து செய்த விதத்தில் ரூ.25 லட்சம் கோடி இந்தியாவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார்.

The post அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம்: சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Assembly Leader Artist ,Govt Girls Higher Secondary School ,Speaker ,Appa ,Kuduvanchery ,Assembly Nayak ,Govt Girls High School.… ,Govt Girls High School ,Dinakaran ,
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது...