×

ஆவடி மாநகராட்சியில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தாழ்வான பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் சா.மு.நாசர் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியை துரிதப்படுத்தும் படி அங்கிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஸ்ரீராம் நகர், பருத்திப்பட்டு, அண்ணனூர், திருமுல்லைவாயல், திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளை திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான சா.மு.நாசர் பார்வையிட்டார். பின்னர், மழை நீர் வடிவதற்கு வடிகால் பணிகளை துரிதமாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை எடுக்குமாறு மேலும், மழைநீர் தேங்காமல் இருக்க வழிவகை செய்யுமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில், மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகர பொறுப்பாளர் சண் பிரகாஷ், 40 வார்டு மாமன்ற உறுப்பினர் சத்யா ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post ஆவடி மாநகராட்சியில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Avadi Municipality ,Avadi ,M. Nassar ,MLA ,Dinakaran ,
× RELATED மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி: சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார்